உலக கோப்பை கால்பந்து போட்டி: அமைதிக்கான சந்தர்ப்பமாக இருக்க போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கால்பந்து போட்டி: அமைதிக்கான சந்தர்ப்பமாக இருக்க போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

வாடிகன் சிட்டி: உலக கோப்பை கால்பந்து போட்டி நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியை உற்சாகப்படுத்தியதுடன், கத்தார் போட்டி உலகில் நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். பொது பார்வையாளர்களின் முன்னிலையில் தனது வாராந்திர சந்திப்பில் பேசிய பிரான்சிஸ், கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த முக்கியமான நிகழ்வு, நாடுகளின் சந்திப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும். மக்களிடையே சகோதரத்துவத்தையும் அமைதியையும் ஆதரிக்கட்டும். உலகில் அமைதி நிலவவும், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரவும் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தார்.

மூலக்கதை