மலேஷியா புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு

தினமலர்  தினமலர்
மலேஷியா புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டன. இதனையடுத்து அவர் மலேஷியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்த கூட்டணி 82 இடங்களை பிடித்தது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான மலாய் தேசிய கூட்டணி, 73 இடங்களில் வென்றது.

இக்கூட்டணியின் பான்-மலேஷிய இஸ்லாமியக் கட்சி மட்டும் 49 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் தேசிய கூட்டணி, 30 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. எந்தவொரு கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு பார்லி., உருவாகி உள்ளது. இந்த நிலையில் மற்ற சிறிய கட்சிகள் அன்வர் இப்ராஹிம் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அன்வர் இப்ராஹிம் மலேஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர்

மூலக்கதை