நடிகை சோனாலி போகத்தின் மர்ம மரணம் : திடுக்கிடும் தகவல்

தினமலர்  தினமலர்
நடிகை சோனாலி போகத்தின் மர்ம மரணம் : திடுக்கிடும் தகவல்

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாலிவுட் நடிகை சோனாலி போகத். பாஜகவை சேர்ந்தவரான இவர் 2019ல் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சோனாலி போகத் அந்த பார்ட்டியில் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருள் அதிக அளவு கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதனால் சோனாலி போகத்தின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது சோனாலி போகத்தின் மரணம் குறித்து 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோவா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், நடிகை சோனாலி போகத்தின் உதவியாளரும், நண்பரும் சேர்ந்து தண்ணீரில் அவருக்கு போதை பொருளை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதனால் அவரது உதவியாளர் சுதீர் சங்கரன் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சோனாலி போகத்திற்கு தண்ணீரில் போதை பொருள் கலந்து கொடுக்கும் சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்திற்கு ஆதாரமாக காவல்துறை கொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலக்கதை