நியூசி-இந்தியா இடையே ஒருநாள் தொடர் ஆரம்பம்

தினகரன்  தினகரன்
நியூசிஇந்தியா இடையே ஒருநாள் தொடர் ஆரம்பம்

ஆக்லாந்து: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு  தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  முதலில் நடந்த டி20 தொடரைஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி  1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில்  ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. தொடர்ந்து நவ.27ம் தேதி ஹாமில்டன்னில் 2வது ஆட்டமும், 3வது ஒருநாள் ஆட்டம்  நவ.30ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறும்.டி20 தொடரில் விளையாடிய ஹர்திக்(கேப்டன்),  இஷான், புவனேஸ்வர், சிராஜ், ஹர்ஷல் ஆகியோருக்கு பதிலாக ஒருநாள் அணியில் தவான்(கேப்டன்),  தீபக் சாஹர், குல்தீப் சென், ஷஹபாஸ்,  ஷர்துல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில்  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவான் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்தில் இன்று களம் காண உள்ளது.அதே நேரத்தில் நியூசி அணி,  டி20 உலக கோப்பையில் தோல்வி. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை சொந்த மண்ணில் இழந்தது. நன்றாக விளையாடியும் மழையால் வெற்றிகளை பறிகொடுத்த பரிதாப நிலையில் நியூசி உள்ளது.  வெற்றி அவசியம் என்ற வேகத்தில் கேன் வில்லியம்சன் தலைமையில் இன்று களம் காண உள்ளது. டி20 தொடரில் விளையாடிய  மார்க் சாப்மேன், ஈஷ் சோதி,  டிக்னர் ஆகியோர் நீக்கப்பட்டு மேட் ஹென்றி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.அணி விவரம்இந்தியா: தவான்(கேப்டன்), ரிஷப், சாம்சன்(விக்கெட் கீப்பர்கள்),  அர்ஷதீப், சாஹல், சாஹர், ஸ்ரேயாஸ், குல்தீப் யாதவ், குல்தீப் சென்,  ஹூடா, ஷஹபாஸ், ஷூப்மன், ஷர்துல், உம்ரன், வாஷிங்டன், சூரியகுமார். நியூசி:  வில்லியம்சன்(கேப்டன்),  ஆலன், பிரேஸ்வெல், லாதம், கான்வே(விக்கெட் கீப்பர்கள்), பெர்கூசன், ஹென்றி, ஆடம், டாரியல், நீஷம், கிளென், சான்ட்னர், சவுத்தீ.இதுவரை நேருக்கு நேர்...இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 110 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 55 ஆட்டங்களிலும், நியூசி 49 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 6 ஆட்டங்களில் ஒன்று சரிநிகர் சமனில் முடிய, மீதி 5 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.தொடர் வெற்றி...இந்த 2 அணிகளும் 1975ம் ஆண்டு முதல் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன. இதில் 2020வரை நடந்த  15 தொடர்களில் இந்தியா 8 தொடர்களையும்,  நியூசிலாந்து 5 தொடர்களையும் கைப்பற்றி உள்ளன.  மேலும் 2 தொடர்கள் சமனில் முடிந்தன. கடைசியாக...இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில்  நியூசி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது..

மூலக்கதை