'கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும்': தெற்கு ரயில்வே-க்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
கஞ்சிக்கோடு  வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் தெற்கு ரயில்வேக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.18 மதிப்பில் சோலார் விளக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனில் கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே இரவுநேர ரயில் சேவையை நிறுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். கடினமான மலைப்பாதையில் ரயிலை இயக்கம் தொழில்நுப்டம் உள்ள போது, இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதா? எனவும் நீதிபதிகள் வினவினர்.

மூலக்கதை