ஸ்பெயின் கோல் மழை: கோஸ்டாாிக்காவை 7-0 என வீழ்த்தியது

தினகரன்  தினகரன்
ஸ்பெயின் கோல் மழை: கோஸ்டாாிக்காவை 70 என வீழ்த்தியது

குரூப் ஈ பிரிவில் நேற்றிரவு 9.30 மணிக்கு நடந்த போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின், உலகக்கோப்பைத் தொடருக்கு கடைசியாக தகுதி பெற்ற கோஸ்டா ரிக்காவை எதிர்த்து ஆடியது. இதில் ஸ்பெயின் 4-3-3, கோஸ்டா ரிக்கா 4-4-2 என்ற பார்மேஷனிலும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 11வது நிமிடத்தில் டேனி ஒல்மோ ஸ்பெயின் அணிக்காக முதல் கோலை அடித்தார். 21வது நிமிடத்தில் மார்கோ அசான்சியோ 2வது கோலையும், 31வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர வீரர் ஃபெரன் டோரஸ் 3வது கோலையும் அடித்தனர். முதல் பாதியில் ஸ்பெயின் 3-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் தொடக்கம் முதலே ஸ்பெயின் ஆக்ரோஷத்தை அதிகரித்தது. 54வது நிமிடத்தில் ஃபெரன் டோரஸ் 4வது கோலை அடித்து அசத்தினார். இதன்பின்னர் 74வது நிமிடத்தில் ஸ்பெயின் இளம் வீரர் காவி ஒரு கோல் அடிக்க, கடைசி நிமிடத்தில் சோலரும் கோல் அடித்தார். ஆட்டம் முடிந்தது என்ற நினைத்தபோது, கூடுதல் நிமிடத்திலும் ஸ்பெயின் ஆல்வரோ மொரட்டா தனது பங்கிற்கு 7வது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஸ்பெயின் 7-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. கோஸ்டா ரிக்கா கடைசி வரை கோஸ்போஸ்ட் பக்கம் கூட பந்தை எடுத்து செல்லவில்லை. முன்னதாக இந்த பிரிவில் நேற்றுமாலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை 1-2 என ஜப்பான் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை