கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க சீனா திட்டம்: தலைநகர் பெய்ஜிங்கில் பள்ளிகளை மூட உத்தரவு..!

தினகரன்  தினகரன்
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க சீனா திட்டம்: தலைநகர் பெய்ஜிங்கில் பள்ளிகளை மூட உத்தரவு..!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது கொரோனா வைரஸ். கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டது கொரோனா. 2020ம் ஆண்டில் உச்சத்தில் இருந்த கொரோனா படிப்படியாக குறைந்து தற்போது 95% குறைந்துள்ளது. கொரோனாவால் பொருளதார ரீதியாக பெரிய பின்னடைவை சந்தித்த உலக நாடுகள் இப்போது மெல்ல இந்த சரிவில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,500 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. நேற்று முன்தினமும் ஒரே நாளில் 29,157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயங்கங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், சீன அரசு ஆலோசனை செய்து வருகிறது. முதற்கட்டமாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பள்ளிகளில் உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான ஷாங்காயில் பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மூலக்கதை