துருக்கியில் நிலநடுக்கம்: பால்கனியில் இருந்து குதித்த 50 பேர் காயம்

தினகரன்  தினகரன்
துருக்கியில் நிலநடுக்கம்: பால்கனியில் இருந்து குதித்த 50 பேர் காயம்

அன்காரா:  துருக்கின் டியூசி மாகாணத்தின் கோல்கயா என்ற நகரை மையமாக கொண்டு நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் அங்காரா உட்பட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இது, ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். பலர் உயிர்பிழைத்தால் போதும் என்ற உணர்வில் வீடுகளின்  ஜன்னல்களில் இருந்தும், பால்கனியில் இருந்தும் கீழே குதித்துள்ளனர். இதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மூலக்கதை