ராஜிவ் தியாகம் சீமானுக்கு தெரியாது!

தினமலர்  தினமலர்
ராஜிவ் தியாகம் சீமானுக்கு தெரியாது!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஆனால், சீமான் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு, இது கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

'ராஜிவ் என்ன பெரிய தியாகியா? சோனியா வெளிநாட்டை சேர்ந்தவர் தானே? அவரையும் நாடு கடத்த வேண்டியது தானே?' என்று உளறிக் கொட்டி இருக்கிறார் சீமான். இதைக் கேட்கும் போது, ராஜிவை கொன்றவர்களை மன்னித்த, சோனியாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. சோனியா, வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், முறைப்படி குடியுரிமை பெற்றவர்.

ராஜிவ் என்ன பெரிய தியாகியா என்று கேட்கும் சீமான், விடுதலை புலிகள் தலைவராக இருந்த, மறைந்த பிரபாகரன் செய்த தியாகங்களை பட்டியலிட தயாரா? ராஜிவை மட்டும் விடுதலை புலிகள் கொடூரமாகக் கொலை செய்ய வில்லை. ஈழத்தை சேர்ந்த தமிழர்களின் உரிமைக்காக அறவழியில் போராட்டம் நடத்திய பத்மநாபாவையும், அமிர்தலிங்கத்தையும் கொன்றனர்.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை

மூலக்கதை