முன்கூட்டியே தேர்தல் கிடையாது: இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
முன்கூட்டியே தேர்தல் கிடையாது: இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்

கொழும்பு: ''நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல், ஆட்சியை முன்கூட்டியே கலைக்க முடியாது,'' என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. பெட்ரோல் - டீசல் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர், பிரதமர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து இலங்கை அதிபராக அப்போது பதவி வகித்து வந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர் என்பதால், ரணிலை அதிபராக ஏற்பதில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மக்களிடமும் தயக்கம் உள்ளது.

இவரது ஆட்சி காலம் 2024ல் முடிவுக்கு வருகிறது.

எனவே, அதுவரை காத்திருக்காமல் ஆட்சியை கலைத்து பொது தேர்தலை விரைவில் நடத்த, அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை பார்லியில் பேசிய ரணில் விக்ரமசிங்கே ''நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் ஆட்சியை முன்கூட்டியே கலைக்க முடியாது.

மீண்டும் போராட்டம் நடத்தி நாட்டின் அமைதியை குலைக்க முயன்றால் ராணுவத்தை பயன்படுத்தி போராட்டம் ஒடுக்கப்படும்,'' என்றார்.

கொழும்பு: ''நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல், ஆட்சியை முன்கூட்டியே கலைக்க முடியாது,'' என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.அண்டை நாடான இலங்கையில்

மூலக்கதை