'அறுவை சிகிச்சைகள் ஆய்வுக்கு 4 மண்டலங்களில் தணிக்கை குழு'

தினமலர்  தினமலர்
அறுவை சிகிச்சைகள் ஆய்வுக்கு 4 மண்டலங்களில் தணிக்கை குழு


சென்னை ''அறுவை சிகிச்சைகளை ஆய்வு செய்ய, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் குறித்த கையேட்டை வெளியிட்ட பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

கருத்தரங்கில், பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கையேடு, ஒரு வாரத்தில் அனைத்து அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கும் கிடைக்கும்.

இறப்புகள் குறித்து தணிக்கை செய்ய, அந்தந்தஅரசு மருத்துவமனைகளில் தணிக்கை குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் அறிக்கையை ஆராய்வது, விவாதத்திற்கு உள்ளாகும் அறுவை சிகிச்சைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை தனி கவனம் செலுத்தி ஆராய்வதற்கு, மண்டல தணிக்கை குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

சென்னை ''அறுவை சிகிச்சைகளை ஆய்வு செய்ய, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்

மூலக்கதை