கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

லிஸ்பன்: போர்ச்சுக்களை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து விடை பெற்றார். இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிதலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்து நிருபர்க்கு அளித்த போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். கிளப்பில் உள்ள நிர்வாகிகள் தன்னை கிளப்பில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும் பயிற்சியாளர் எரிக்டென் ஹக் மீது எந்த மரியாதையும் இல்லை என்றும் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்திருந்தார். எனவே, விரைவில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப்பில் இருந்து வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரொனால்டோ கிளப்பில் இருந்து விலகுவதை மான்செஸ்டர் யுனைட்டெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. ரொனால்டோ கடந்த சீசனில் தனது முந்தைய கிளப் மான்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு திருப்பினார். ஆனால், அங்கு அவரால் முன்பு போல் இருக்க முடியவில்லை. தற்போது போர்ச்சுக்கல் அணிக்கு தலைமையேற்று தனது கடைசி உலக கோப்பையில் பங்கேற்றுள்ள ரொனால்டோ இப்போதைய சூழலில் உலக கோப்பையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.          

மூலக்கதை