மாறிய ‘டி–20’ உலக கோப்பை விதிகள் * களமிறங்கும் 20 அணிகள் | நவம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
மாறிய ‘டி–20’ உலக கோப்பை விதிகள் * களமிறங்கும் 20 அணிகள் | நவம்பர் 22, 2022

துபாய்: ‘டி–20’ உலக கோப்பை தொடரில் 20 அணிகள் களமிறங்க உள்ளன. ‘சூப்பர்–8’, ‘சூப்பர்–4’ பிரிவுகள் அறிமுகம் ஆகின்றன. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. 2021, 2022ல் 16 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் மோதின. இதில் 2 அணிகள் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு முன்னேறின. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. 

அடுத்து 2024ல் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் படி 

* பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டன. 

* சமீபத்தில் முடிந்த தொடரில் முதல் 8 இடம் பிடித்த இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து,  நவ. 14, 2022 ம் தேதியின் படி ‘டி–20’ தரவரிசையில் சிறப்பான இடம் பெற்ற ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தொடரை நடத்தும் இரு அணிகள் சேர்த்து 12 அணிகள் 2024 தொடரில் நேரடியாக பங்கேற்கும். 

* மீதமுள்ள 8 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள் வழியாக முடிவு செய்யப்படும். 

* மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக (தலா 5 அணி) பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும்.

* ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்–2’ இடம் பெறும் அணிகள் ‘சூப்பர்–8’ சுற்றுக்கு முன்னேறும்.

* இந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். 

* ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்–2’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் பைனலில் மோதும்.

மூலக்கதை