ட்வீட் கார்னர்... முத்தரப்பு முன்னோட்டம்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... முத்தரப்பு முன்னோட்டம்!

ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில்... நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் மோதும் முத்தரப்பு டி20 தொடர் கிறைஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டதில் மோதும் நிலையில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக். 14ம் தேதி நடக்கும் பைனலில் மோத உள்ளன. உலக கோப்பைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரும், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முத்தரப்பு டி20 தொடருக்கான கோப்பையுடன் வங்கதேச கேப்டன் நூருல் ஹசன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

மூலக்கதை