ஹாட்ரிக் வெற்றியுடன் இந்தியா முன்னிலை

தினகரன்  தினகரன்
ஹாட்ரிக் வெற்றியுடன் இந்தியா முன்னிலை

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில், இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதி வருகின்றன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையையும், 2வது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது. இந்நிலையில், 3வது போட்டியில் நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. தீப்தி ஷர்மா 64 ரன், ஜெமிமா ரோட்ரிகியூஸ் 75* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய யுஏஇ 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன் மட்டுமே எடுத்து 104 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜெமிமா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் இந்தியா 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் (4), இலங்கை (4) அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா தனது 4வது லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது.

மூலக்கதை