மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் சிக்கல் டிவிட்டரை வாங்குகிறார் மஸ்க்

தினகரன்  தினகரன்
மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் சிக்கல் டிவிட்டரை வாங்குகிறார் மஸ்க்

நியூயார்க்: உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.59 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதற்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்ட நிலையில், அதில் போலி கணக்குகள் அதிகளவில் இருப்பதாக குற்றம் சாட்டிய மஸ்க், அதனை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, டிவிட்டர் பங்கு ஒன்றை ரூ.4,442 (54.20 அமெரிக்க டாலர்கள்) வீதம் வாங்கும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் அமெரிக்க வர்த்தக பத்திரகையான புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. மஸ்க்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வர்த்தக இடைநிறுத்தத்திற்கு முன்பு, டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் அதிகரித்து ரூ.3,912 ஆக (47.95 அமெரிக்க டாலர்) உயர்ந்தது.

மூலக்கதை