ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் 16 வயது இளம்பெண்ணை கொன்று புதைத்த ராணுவம்

தினகரன்  தினகரன்
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் 16 வயது இளம்பெண்ணை கொன்று புதைத்த ராணுவம்

டெக்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயது மாஷா அமினி கடந்த 17ம் தேதி இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் முழுவதும் போராட்டம் நடக்கிறது. இதுவரையில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால், போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி நிகா ஷகராமி, மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் போராட்டம் மேலும் தீவிரமடைய கூடும் என கருதிய ராணுவம், நிகாவின் உடலை திருடி சென்று ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர். நிகா தனது தோழிக்கு கடைசியாக அனுப்பிய செய்தியில் ராணுவத்தினர் தன்னை பின் தொடர்வதாகவும், பயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நிகாவின் கொலை தொடர்பாக சமூக வலைதளத்தில் தோழி தகவல் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து கொதிப்படைத்த மக்கள், நிகா புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை