மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்-அமெரிக்கா மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், வேதியியல் பிரிவுக்கான விருது நேற்று மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையின் கரோலின் பெர்டோசி, கல்போர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த பெர்ரி ஷார்ப்ளஸ், ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கோபஹேகன் பல்கலையின் மார்டன் மெல்டால் ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர்.மருந்துகள் தயாரிப்பதற்கு உதவும் வகையில் மூலக்கூறுகளை ஒன்றாக இணைக்கும் முறையை உருவாக்கியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

'கிளிக் கெமிஸ்டரி' என்றழைக்கப்படும் இந்த முறையானது, டி.என்.ஏ., எனப்படும் மரபணுக்களை அடையாளம் காணுதல், புற்று நோய்க்கான மருந்துகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.இந்த மூவரில், பெர்ரி ஷார்ப்ளஸ், 2001ம் ஆண்டும் நோபல் பரிசு வென்றுள்ளார். இதன் வாயிலாக, இரண்டு முறை நோபல் பரிசு பெறும் ஐந்தாவது நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.


போட்டியில் இந்தியர்கள்அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசுக்கான போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 341 பேர் இடம் பெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'டைம்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. போட்டியில் இருப்பவர்களில், 92 அமைப்புகளும், 251 தனி நபர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ஆகியோரது பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள், செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிடும், 'ஆல்ட்நியூஸ்' என்ற இணையதளத்தைச் சேர்ந்தவர்கள்.



ஸ்டாக்ஹோம்-அமெரிக்கா மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை