இந்திய தயாரிப்பு மருந்தால்66 குழந்தைகள் உயிரிழப்பா?

தினமலர்  தினமலர்
இந்திய தயாரிப்பு மருந்தால்66 குழந்தைகள் உயிரிழப்பா?

புதுடில்லி ?:'காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், 'அந்த குழந்தைகள் உட்கொண்ட மருந்து அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளது.





இந்தியாவை சேர்ந்த, 'மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மற்றும் சளி, 'டானிக்' அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.'இந்த மருந்தில், 'டயத்லைன் கிளைகோசில்' மற்றும் 'எதிலின் கிளைகோசில்' மூலப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.'இது காம்பியாவை தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி இருக்கலாம்' என கூறப்படுகிறது.

புதுடில்லி ?:'காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை