முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-தென்ஆப்ரிக்கா நாளை லக்னோவில் மோதல்

தினகரன்  தினகரன்
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாதென்ஆப்ரிக்கா நாளை லக்னோவில் மோதல்

லக்னோ: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே அடுத்ததாக 3ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி லக்னோவில நாளை நடக்கிறது. இந்திய அணியில் முன்னணிவீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையில் களம் இறங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர், சுப் மான்கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சுசாம்சன், இஷான்கிஷன்,ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர்,  குல்தீப் யாதவ்,  அவேஸ்கான், முகமது சிராஜ் உள்ளிட்டோர் அணியில் உள்ளனர். இதில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. மறுபுறம் பவுமா தலைமையிலான தென்ஆப்ரிக்க அணியில் டிகாக், மார்க்ரம், ரபாடா,  ஜெனிமன் மாலன், மகராஜ் என முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.  இரு அணிகளும் இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49ல் தென்ஆப்ரிக்காவும், 35ல் இந்தியாவும் வென்றுள்ளன. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3ல் தெ.ஆ, 1ல் இந்தியா வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. லக்னோவில் இந்தியா முதன்முறையாக ஒருநாள் போட்டியில் ஆட உள்ளது. இதற்கு முன் இதே தென்ஆப்ரிக்காவுடன் 2020ல் நடைபெற இருந்த போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே லக்னோவில் நாளை மழை வர 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படும்  அபாயம் உள்ளது. பகலிரவு போட்டியான நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30மணிக்கு தொடங்குகிறது.

மூலக்கதை