வி சாஸ்திரி தொடங்குகிறார் சென்னையில் புதிய கிரிக்கெட் அகடமி

தினகரன்  தினகரன்
வி சாஸ்திரி தொடங்குகிறார் சென்னையில் புதிய கிரிக்கெட் அகடமி

ரசென்னை: பிரபல கிரிக்கெட் வீரர்கள்  இணைந்து சென்னையில் புதிதாக  கிரிக்கெட் பயிற்சி அகடமியை தொடங்குகின்றனர். இது குறித்து முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளருமான  பரத் அருண்  கூறியதாவது: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்  ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர்  ஆர்.ஸ்ரீதர் ஆகியோருடன் இணைந்து  புதிதாக கிரிக்கெட் பயிற்சி அகடமியை தொடங்க உள்ளோம். சென்னையில்  அக். 6ம் தேதி தொடங்க உள்ள இந்த அகடமி ஒரு முன்மாதிரி பயிற்சி மையாக இருக்கும். நாங்கள் மூவரும் இந்திய அணியின் பயிற்சிக் குழுவில் இருந்ததால்  அகடமியில் வழங்கும் பயிற்சியும் சர்வதேச தரத்தில் இருக்கும்.ஆட்டத்திறனை வளர்ப்பதுடன், கிரிக்கெட் விளையாட்டின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது மற்றும் மனநலன் உறுதிப்படுத்தும் வகுப்புகளும் பயிற்சியின் அங்கமாக இருக்கும். இதில் பங்கேற்பவர்களின் முழுத் திறனையும் வெளிக் கொண்டுவருவதற்காக அத்தனை விளையாட்டு நுட்பங்களையும் கையாள்வோம். எங்கள் முதல் பயிற்சி மையத்தை மார்ச் மாதம் ஐதராபாத்தில் தொடங்கினோம். சென்னை  அகடமி, கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் தொடங்கப்படும். சிஎஸ்கே அணி தலைமை செயல் அலுவலர் காசி விசுவநாதன் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  ரவி சாஸ்திரி  மையத்தை திறந்து வைப்பார்.

மூலக்கதை