விஹாரி அணி ரன் குவிப்பு: சவுராஷ்டிரா பவுலர்கள் ஏமாற்றம் | அக்டோபர் 02, 2022

தினமலர்  தினமலர்
விஹாரி அணி ரன் குவிப்பு: சவுராஷ்டிரா பவுலர்கள் ஏமாற்றம் | அக்டோபர் 02, 2022

ராஜ்கோட்: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய விஹாரி தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், இரானி கோப்பை முதல் தர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில், ஹனுமா விஹாரி தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி, 2019–20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற சவுராஷ்டிரா அணியுடன் விளையாடுகிறது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 98 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி முதல் இன்னிங்சில் 205/3 ரன் எடுத்திருந்தது. விஹாரி (62), சர்பராஸ் (125) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு கேப்டன் ஹனுமா விஹாரி (82) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய சர்பராஸ் கான், 138 ரன் (2 சிக்சர், 20 பவுண்டரி) விளாசினார். ஜெயந்த் யாதவ் (37) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய சவுரப் குமார் (55) அரைசதம் கடந்தார்.

 

‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி முதல் இன்னிங்சில் 374 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. உம்ரான் மாலிக் (16) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் சேட்டன் சக்காரியா 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

சவுரப் அசத்தல்: பின் களமிறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு சவுரப் குமார் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ ஹர்விக் தேசாய் (20), ஸ்னெல் படேல் (16) சிக்கினர். ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்து, 227 ரன் பின்தங்கி இருந்தது. சிராக் ஜானி (3), தர்மேந்திரசிங் ஜடேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை