முகேஷ், ரஜத் படிதர் தேர்வு: இந்திய அணி அறிவிப்பு | அக்டோபர் 02, 2022

தினமலர்  தினமலர்
முகேஷ், ரஜத் படிதர் தேர்வு: இந்திய அணி அறிவிப்பு | அக்டோபர் 02, 2022

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் முகேஷ் குமார், ரஜத் படிதர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் அக். 6ல் லக்னோவில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ராஞ்சி (அக். 9), டில்லியில் (அக். 11) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் பெங்கால் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 28, மத்திய பிரதேச ‘பேட்டர்’ ரஜத் படிதர் 29, புதுமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 9 விக்கெட் சாய்த்த முகேஷ், இரானி கோப்பையிலும் (4) விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதேபோல ரஜத் படிதர், ஐ.பி.எல்., ‘பிளே–ஆப்’, ரஞ்சி கோப்பை பைனல், நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார்.

 

கேப்டனாக ஷிகர் தவான், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ரஜத் படிதர், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சகார்.

மூலக்கதை