வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

தினமலர்  தினமலர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம்-'மழை, வெள்ள பாதிப்பு இடங்களாக மாவட்டத்தில் 8 இடங்கள் அதிக பாதிப்பு, 35 இடங்கள் மிதமான பாதிப்பு, 79 இடங்கள் குறைவாக பாதிப்பு என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:வடகிழக்கு பருவமழை இம் மாதம் துவங்கி டிசம்பர் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக் காலத்தில் பொதுமக்கள் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு தகவல் அளிக்க 4500 முதல் தகவல் அளிப்பாளர்களும், வட்ட அளவில் 9 குழுக்கள், உள்வட்ட அளவில் 34 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் அளிக்கும் தகவல்கள் மூலம் மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் 8 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகவும், 35 இடங்கள் மிதமான பாதிக்கக்கூடிய இடங்களாகவும், 79 இடங்கள் குறைவாக பாதிக்க கூடிய இடங்கள் என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.மழைநீர் உட்புகும் தாழ்வான பகுதி கிராமங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். வெள்ளம் ஏற்படும் காலத்தில், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளை நிவாரண முகாம்களில் தங்க வைக்கத் தேவையான இடத்தினை தயார் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பான முறையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

சாக்குப் பை, மணல் மூட்டைகள் தேவையான அளவில் வைத்திருக்க வேண்டும்.சமுதாய கூடங்கள், பள்ளிக் கூடங்களில் நிவாரண முகாம்களாக தயார் செய்ய வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து வழங்க வேண்டும். டேங்க்குகளில் தண்ணீர் ஏற்ற மோட்டார்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்களை மீட்டு வர தேவையான வாகனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். சாலையில் விழும் மரங்களை வெட்டி அகற்றவும், பழுதடைந்த அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அதில் மக்கள் தங்காதபடி பொதுப்பணித்துறை எச்சரிக்கை செய்ய வேண்டும்.அணை, ஏரி, ஆற்றில் செல்லும் நீரின் அளவு கண்காணித்து, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து நீர் நிலை பகுதியிலும் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்.வேளாண் துறையினர், மழை சேதங்களை சரியாக கணக்கிட்டு இழப்பீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரம், பூச்சி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.மருத்துவத் துறையினர் காய்ச்சல், நோய் தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.கூட்டுறவுத் துறையினர் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க ஒரு மாதத்திற்கு தேவையான அளவு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

மின்வாரியத்தினர் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க முன்னதாக மின் வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.தீயணைப்புத் துறையினர் பொதுமக்களை மீட்கத் தேவையான படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் தயராக வைத்து கொள்ளவும். மழை காலத்தில் மக்களின் தினசரி பணி பாதிக்காதபடி மீட்பு நடவடிக்கையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.கூட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


விழுப்புரம்-'மழை, வெள்ள பாதிப்பு இடங்களாக மாவட்டத்தில் 8 இடங்கள் அதிக பாதிப்பு, 35 இடங்கள் மிதமான பாதிப்பு, 79 இடங்கள் குறைவாக பாதிப்பு என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது' என

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை