இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் நட்பு நாடுகளே: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

தினமலர்  தினமலர்
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் நட்பு நாடுகளே: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எப்-16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானிற்கு ராணுவ உதவிகள் வழங்குவதை முந்தைய அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது ஜோ பைடன், போர் விமானம் வழங்க ஒப்புதல் வழங்கியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே கலந்துரையாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க இருக்கும் ராணுவ உதவிக்கு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்-16 விமானம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று அனைவருக்கும் தெரியும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காகவே பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அரசு கூறுவதை ஏற்க முடியாது. இந்த மாதிரி காரணங்களைக்கூறி அனைவரையும் முட்டாளாக்க வேண்டாம்' எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனான எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு முக்கியமான புள்ளிகளில் எங்களுடைய நட்பு நாடுகளாகும். இரு நாடுகளுடனும் நட்பின் அடிப்படையில் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்கிறோம். இந்தியாவுடனான எங்களின் உறவு தனித்துவமானது. பாகிஸ்தானுடனான எங்களின் உறவும் தனித்துவமானது. இவ்வாறு அவர் கூறினார்.

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எப்-16

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை