உலகின் மிகசிறந்த விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் 7-வது முறையாக விருது வென்று அசத்தல்

தினகரன்  தினகரன்
உலகின் மிகசிறந்த விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் 7வது முறையாக விருது வென்று அசத்தல்

கத்தார்: உலகின் மிகசிறந்த விமான நிறுவனமான தொடர்ந்து 7-வது முறையாக கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்த்த ஸ்கை ட்ராக்ஸ் விமான சேவை ஆய்வு நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் சிறந்த விமான நிறுவனத்தை தேர்வு செய்து, விருது அளிக்கிறது. விமான சேவை துரையின் ஆஸ்கர் பரிசு என்று ஸ்கை ட்ராக்ஸ் விருது புகழப்படுவது குறிப்பிடத்தக்கது.2021 செப். முதல் 2022 ஆக. வரை சுமார் 100 நாடுகளை சேர்ந்த 1.4 கோடி விமான பயணிகளிடம் இன் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி, சிறந்த விமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. முதல் இடத்தில் கத்தார் ஏர்வேஸ் 2. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 3. எமிரேட்ஸ் ஏர்வேஸ் 4. என்.என்.ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ் 5. குவின்டாஸ் ஏர்வேஸ் 6. ஜப்பான் ஏர்லைன்ஸ் 7. டர்கிஷ் ஏர்லைன்ஸ் 8. ஏர் பிரான்ஸ் 9. கொரியன் ஏர் நிறுவனமும் உள்ளன. இந்தியாவின் விஸ்தாரா நிறுவனம் 20-வது இடத்தை பெற்றுள்ளது, இது டாடா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனம். விஸ்தாரா நிறுவனம் இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் விருதும், தெற்கு ஆசியாவின் சிறந்த விமான நிறுவன விருதையும் வென்றது. முதல் இடத்தை பெற்றுள்ள கத்தார் ஏர்வேஸ் சிறந்த பிஸினஸ் கிளாஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஜூலையில் ஏர்லைன்ஸ் ரேட்டிங் என்ற ஆய்வு நிறுவனம் 2022-ன் சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை