மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரம்; கைதான ராணுவ வீரரிடம் விசாரணை: சமூக வலைதள காதலால் ஏற்பட்ட வினை

தினகரன்  தினகரன்
மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரம்; கைதான ராணுவ வீரரிடம் விசாரணை: சமூக வலைதள காதலால் ஏற்பட்ட வினை

மொஹாலி: பஞ்சாப்பில் மாணவிகள் குளிக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் சக மாணவியை காதலித்து வந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாபின் மொஹாலி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியின்  குளியலறையில் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட சக மாணவியின்  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட மாணவி, அவரது ஆண் நண்பரான ராணுவ வீரர் சஞ்சீவ் சிங் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து   பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) கவுரவ் யாதவ் கூறுகையில், ‘அருணாச்சல பிரதேசத்தில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சீவ் சிங் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட  மாணவியை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது’ என்றார். இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில், ‘ராணுவ வீரர் சஞ்சீவ் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்த சக மாணவியை அவர் காதலித்து வந்துள்ளார். சமூக வலைதளம் மூலம் சக மாணவியின் அறிமுகம் ராணுவ வீரருக்கு கிடைத்துள்ளது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். மாணவிகள் குளிக்கும் வீடியோவை ராணுவ வீரருக்கு மாணவி பகிர்ந்தாரா? என்பது குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. சஞ்சீவ் சிங்கிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவிகள் குளிக்கும் வீடியோவை அனுப்புமாறு வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

மூலக்கதை