'சமூக விரோதிகளின் தைரியத்திற்கு தி.மு.க., அரசு தான் காரணம்'

தினமலர்  தினமலர்
சமூக விரோதிகளின் தைரியத்திற்கு தி.மு.க., அரசு தான் காரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


கோவை : ''பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது, அவர் கூறிய தாவது:கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது அருகில் ஆட்கள் விழித்து இருந்ததால், உடனே தீயை அணைத்துள்ளனர்; இல்லையேல் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.குண்டு வீசப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன் உள்ளனர்.



தி.மு.க., ஆட்சியில் இருப்பதால், சமூக விரோதிகளுக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக, தி.மு.க., இதுபோன்ற சம்பவங்களை கண்டு கொள்ளால் இருக்கிறது.என்.ஐ.ஏ., சோதனை வாயிலாக, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் சதி திட்டங்கள் தெரிய வந்து உள்ளது.

என்.ஐ,ஏ.,வுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால், இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். முதல்வர் இந்த பிரச்னையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவை : ''பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை