சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இல்லை; ஜாலிக்காக வதந்தியை பரப்பிய அமெரிக்க வாழ் சீனப் பெண்: சர்வதேச ஊடங்களின் உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

தினகரன்  தினகரன்
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இல்லை; ஜாலிக்காக வதந்தியை பரப்பிய அமெரிக்க வாழ் சீனப் பெண்: சர்வதேச ஊடங்களின் உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொழுதை ஜாலியாக கழிக்க அமெரிக்காவில் வசிக்கும் சீனப் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டது அம்பலமாகி உள்ளது. இது சர்வதேச ஊடகங்களின் உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின்  தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்றில் இருந்து உலகம் முழுவதும்  செய்திகள் பரவி வருகின்றன. மேலும் அவர் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் ஒட்டுமொத்த ஆட்சியும் மக்கள் விடுதலை ராணுவத்தின் கைகளுக்குப் போய்விட்டதாக செய்திகள் வருகின்றன. ஆனால் சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியோ அல்லது அரசு ஊடகமோ இதுவரை அதிகாரப்பூர்வ எவ்வித தகவலையும்  வெளியிடவில்லை. தற்போதைய வைரல் செய்திக்கு காரணம், சீனப் பெண்களின் தலைவியான ஜெனிபர் ஜங் என்பவர், ஹுவான்லாய் கவுண்டியில் இருந்து ஹெபெய் மாகாணத்தில் உள்ள சோங்ஜியாவ் நகருக்கு சீன ராணுவ வாகனங்கள் புடைசூழ சென்றார். சுமார் 80 கிலோமீட்டர் தூரமுள்ள அந்த நகருக்கு சீன ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதனால் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள வதந்திகள் பரவி வருகின்றன. போதக்குறைக்கு ெவளிநாடுகளில் இருக்கும் சீனர்கள் சிலர், அவ்வப்போது சீனாவில் நடக்கும் செய்திகளை சமூக ஊடங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர். மேலும் சமீபத்தில், சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4  அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன  அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.நேற்று வெளியான வதந்தி வீடியோக்கள் குறித்து சர்வதேச ஊடங்கள் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்திக் கொண்டன. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த சீனப் பெண் பிரஜை ஒருவர், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அவர் முகாமில் இருக்கும் போது பொழுதை கழிப்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கிண்டலாக கூறினார். கிட்டத்தட்ட 26 நிமிடம் ஓடும் அந்த வீடியோவை பார்த்துதான், ெவளிநாட்டில் வசிக்கும் சீனர்களும் அரசின் மீதான வெறுப்பால் அதே கருத்தை வலியுறுத்தி பதிவிட்டுள்ளனர். இவ்வாறாக உலகம் முழுவதும் இந்த செய்தி வைரலானது. வீடியோவை வெளியிட்டவர், தனது சேனலுக்கு நன்கொடைகள் தேவை என்பதற்காக இந்த வதந்தியை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை