24 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஏமனில் அரசுப் படைகள் அதிரடி

தினகரன்  தினகரன்
24 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஏமனில் அரசுப் படைகள் அதிரடி

அப்யான்: அப்யானில் அரசுப் படைகளுக்கும், அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினருக்கும்  ஏற்பட்ட மோதலில் 24 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனை தளமாகக் கொண்ட அல்-கொய்தா தீவிரவாத கும்பல், தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஏமன்  அரசாங்கத்திற்கும், ஹூதி போராளிகளுக்கும் இடையே நடக்கும் மோதலைப் பயன்படுத்தி, அல்-கொய்தா அமைப்புகளும் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஏமனின் தெற்கு மாகாணமான அப்யானில் அரசுப் படைகளுக்கும், அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 24 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஏமன் அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எதிர்தாக்குதல் நடத்திய 24 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த பல வாரங்களாக நடந்த சண்டைக்கு மத்தியில் கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து அல்-கொய்தா தீவிரவாதிகள் விரப்பட்டனர். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட இருதரப்பு தாக்குதலில் 32 வீரர்கள் கொல்லப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை