பெல்ஜிய கருங்கல்லால் கட்டப்பட்ட எலிசபெத்தின் கல்லறை புகைப்படம் வெளியீடு

தினகரன்  தினகரன்
பெல்ஜிய கருங்கல்லால் கட்டப்பட்ட எலிசபெத்தின் கல்லறை புகைப்படம் வெளியீடு

லண்டன்: பெல்ஜிய கருங்கற்களால் கட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் கல்லறைப் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதி  காலமானார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் இங்கிலாந்தின் ராணியாக இருந்த எலிசபெத்  அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் என்ற சரித்திரம் படைத்தார். அவரது  மறைவுக்கு பின்னர் ராணியின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் அரசர்  பொறுப்பேற்றார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றன. இந்நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தின் கல்லறை புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வௌியிட்டுள்ளது. இந்த கல்லறை மன்னர் நான்காம் ஜார்ஜ்-யின் மெமோரியல் சேப்பலில் அமைந்துள்ளது. கல்லறை முழுவதும் பெல்ஜிய கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மேலும், கல்லறையின் கல்லில் இங்கிலாந்து ராணியின் பெயர், அவரது கணவர் பிலிப் மற்றும் ராணியின் பெற்றோரின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. ராணியின் தந்தையான ஆறாம் மன்னர் ஜார்ஜின் கல்லறையம் இதே இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை