கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் கடத்தல்: 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் கடத்தல்: 3 பேர் கைது

மதுரை: மதுரையில் கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய 3 இளைஞர்களை கைது  செய்துள்ளனர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் 2 இளைஞர்களை போலீஸ் தேடி வருகிறது. கிரிப்டோ கரன்சியில் ரூ.40,000 முதலீடு செய்தால் வாரம் ரூ.2000 வட்டி கிடைக்கும் என மாணவர் அருணன், அவரது நண்பர்களுடன் இணைந்து கிரிப்டோ கரன்சியை ரூ.16 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அருணனை கடத்தி சென்றுள்ளனர். 

மூலக்கதை