சிதம்பரத்தில் முதலை அச்சத்தை போக்க நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
சிதம்பரத்தில் முதலை அச்சத்தை போக்க நடவடிக்கை தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிதம்பரம்-சிதம்பரம் கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சத்தை போக்க, மழை காலம் துவங்குவதற்குள், வக்காரமாரி குளத்திற்கு வேலி அமைத்து, முதலைகள் வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் கொள்ளிடக் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எந்த நேரமும் முதலை அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழல் உள்ளது.கொள்ளிடம் அணைக்கரை பகுதிகளில் வசித்து வரும் முதலைகள், வெள்ள நீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கரையோர கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், அங்குள்ள குளம், குட்டை, ஓடைகள் போன்ற நீர்நிலைகளில் தங்குகின்றன.

இந்த முதலைகள், அந்தந்த பகுதியில் உள்ள ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் இறங்கும் பொதுமக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்கின்றன.கடந்த 2006ம் ஆண்டு, சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பாசன வாய்க்காலில் குளித்த வாலிபர் ஒருவரை முதலை கடித்தது. தொடர்ந்து, முதலை கடியால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை கிராமங்களில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் முதலை கடித்து இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளன.ஊருக்குள் புகுந்துவிடும் முதலைகள், தீயணைப்பு மற்றும் வனத்துறை சார்பில் பிடிக்கப்பட்டு, சிதம்பரம் நகராட்சி நீரேற்று நிலையம் அமைந்துள்ள வக்காரமாரியில் உள்ள பெரிய நீர்த்தேக்க குளத்தில் விடப்படுகிறது. ஆண்டு முழுவதும் இப்பகுதியில் பிடிபடும் முதலைகள் வக்காரமாரி குளத்தில் விடப்படும் நிலையில், மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது இக்குளத்தில் உள்ள முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகின்றன

.தொடர்ந்து முதலைகள் வக்காரமாரியில் விடப்படுவதும், வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் முதலைகள் வெளியேறி, மனிதர்களை காவு வாங்குவதும் தொடர் கதையாகி விட்டது. இதன் காரணமாக, சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.



இந்த பகுதிகளில் பிடிபடும் முதலைகளை, சென்னையில் கொண்டு விட வேண்டும் என்ற கோரிக்கையும் செயல்வடிவம் பெறவில்லை.எனவே, தற்காலிக நடவடிக்கையாக, வக்காரமாரி குளத்தில் இருந்து முதலைகள் வெளியில் வராமல் தடுக்க கம்பி வேலி அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்படும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம்-சிதம்பரம் கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சத்தை போக்க, மழை காலம் துவங்குவதற்குள், வக்காரமாரி குளத்திற்கு வேலி அமைத்து, முதலைகள் வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை