அதிரடி ஆஸிக்கு பதிலடி தருமா இந்தியா

தினகரன்  தினகரன்
அதிரடி ஆஸிக்கு பதிலடி தருமா இந்தியா

நாக்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி  3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 200க்கு மேல் ரன் குவித்தும் ஆஸியிடம் 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் 2வது டி20 ஆட்டம் இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் இரு அணிகளிலும்  பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்ததால் முதல் வரிசை ஆட்டக்காரர்கள் மாற்றமின்றி விளையாடுவார்கள். அதே நேரத்தில் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரு அணிகளிலும் மாற்றம் இருக்கலாம். கேப்டன் ரோகித் சர்மாவும், ‘பந்து வீச்சில் கோட்டை விட்டுவிட்டோம்’ என்று சொல்லி இருந்தார். கூடவே ‘அவுட்’களை முறையீடு செய்யாத விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதில்  ரிஷப் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையில் அதிரடியாக ஆடிய ஆஸி அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்ற முனையும்.  ஆனால் இன்றைய ஆட்டத்தில் வென்று பதிலடி தந்தால்தான் தொடர் தோல்வியில் இருந்து இந்தியா தற்காலிகமாக தப்பிக்கும்.  அதனால் இருவருக்கும் வெற்றி முக்கியம். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

மூலக்கதை