திருப்பதியில் அங்க பிரதட்சணம் டிக்கெட் 5 நிமிடங்களில் காலி

தினகரன்  தினகரன்
திருப்பதியில் அங்க பிரதட்சணம் டிக்கெட் 5 நிமிடங்களில் காலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம்  செய்ய வேண்டி கொண்ட பக்தர்களுக்காக அக்டோபர் மாதத்திற்காக  வெள்ளிக்கிழமைகளில் தவிர்த்தும் மற்றும் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறக் கூடிய 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை உள்ள டிக்கெட் தவிர்த்து, மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 1,500 டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் வெளியிடப்பட்ட 5 நிமிடங்களில் பக்தர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்தனர்.

மூலக்கதை