5 மாநில பேரவை தேர்தல் ரூ.340 கோடியை வாரி விட்ட பாஜ

தினகரன்  தினகரன்
5 மாநில பேரவை தேர்தல் ரூ.340 கோடியை வாரி விட்ட பாஜ

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 340 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. உபி, பஞ்சாப்,    கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. பஞ்சாப்பை தவிர இதர மாநிலங்களில் பாஜ பெரும்பான்மையுடன்  ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. அதில், பாஜ 5 மாநிலங்களில் ரூ.344.27 கோடி செலவிட்டுள்ளது. காங்கிரஸ்  ரூ. 194.80 கோடி செலவிட்டுள்ளது. அதிகபட்சமாக உபி.யில் பாஜ ரூ.221.32 கோடி செலவிட்டுள்ளது.பஞ்சாப்பில் ரூ.36.70 கோடியும், 2017ல் ரூ.7.43 கோடியும் செலவிட்டுள்ளது. இருப்பினும், இந்த தேர்தலில் பஞ்சாப்பில் 2 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. கோவாவில், இந்தாண்டு தேர்தலில் அக்கட்சி ரூ.19.07 கோடி செலவிட்டுள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் முறையே ரூ.23.52 கோடி, ரூ.43.67 கோடியை பாஜ செலவு செய்துள்ளது.

மூலக்கதை