மோடியின் பேச்சை கேளுங்க ரஷ்யாவுக்கு பிரிட்டன் அறிவுரை

தினமலர்  தினமலர்
மோடியின் பேச்சை கேளுங்க ரஷ்யாவுக்கு பிரிட்டன் அறிவுரை

நியூயார்க், :'சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்' என, பிரிட்டன் கூறியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. இந்நிலையில், மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அப்போது, 'இந்த யுகம் போருக்கானது அல்ல' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.இந்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பேசிய ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட பல தலைவர்கள், பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றுஉள்ளனர்.இது குறித்து பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கூறியுள்ளதாவது:சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பெரும் மரியாதை உள்ளது. பிரதமர் மோடி மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் பெரும் மரியாதை, நட்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

அதனால், மோடியின் பேச்சைக் கேட்டு, உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று பேசிய நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''உக்ரைனில் போரை நிறுத்தி விட்டு இரு தரப்பும் பேச்சு நடத்த முன்வர வேண்டும்,'' என்றார்.


நியூயார்க், :'சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்' என, பிரிட்டன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை