வரலாறு காணாத அடி டாலர் பறக்குது ரூபாய் இறங்குது: மதிப்பு ரூ.80.86 ஆனது

தினகரன்  தினகரன்
வரலாறு காணாத அடி டாலர் பறக்குது ரூபாய் இறங்குது: மதிப்பு ரூ.80.86 ஆனது

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அவ்வப்போது சரிவை சந்தித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் வர்த்தக இடையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து ரூ.80ஐ தாண்டியிருந்தது. ஆனால், வர்த்தக முடிவில் ரூ.79.98 ஆனது. இதன் பிறகும் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. 80 ரூபாயை நெருங்குவதும், பின்னர் வர்த்தக முடிவில் மதிப்பு ஏற்றம் பெறுவதுமாக இருந்து வந்தது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு நேற்று மீண்டும் கடும் சரிவை சந்தித்தது. நேற்று வர்த்தக துவக்கத்திலேயே அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.80.27 என சரிவுடனேயே துவங்கியது. பின்னர் வர்த்தக இடையில் இதுவரை இல்லாத அளவாக ரூ.80.95 ஆனது. வர்த்தக முடிவில் முந்தைய நாளான ரூ.79.96ஐ விட 90 காசு சரிந்து ரூ.80.86 ஆக முடிந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு முடிவை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு ஸ்திரம் அடைந்தது. இது பிற நாட்டு கரன்சிகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வகையில் நேற்று வரலாறு காணாத சரிவை ரூபாய் சந்தித்துள்ளது.

மூலக்கதை