டிக்கெட் கட்டணத்தை நாங்களே நிர்ணயிக்க அரசு அனுமதிக்க வேண்டும் : தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
டிக்கெட் கட்டணத்தை நாங்களே நிர்ணயிக்க அரசு அனுமதிக்க வேண்டும் : தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு அவசர கூட்டம் நேற்று நடந்து. சங்க தலைவர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், பொருளாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தற்போது உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வில் இருந்து குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முன்பு இருந்தது போன்று தியேட்டர்களுக்கு தனி அட்டவணையின் கீழ் மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். புதிய ஆபரேட்டர்களை நியமனம் செய்ய வசதியாக ஆபரேட்டர் நியமன விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

பெரிய திரையரங்குகளை 2க்கும் மேற்பட்ட சிறிய திரையரங்குகளாக மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும். படம் வெளியான 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூலக்கதை