சொத்து சேர்க்காத மோடி: பாராட்டிய இம்ரான்கான்

தினமலர்  தினமலர்
சொத்து சேர்க்காத மோடி: பாராட்டிய இம்ரான்கான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‛உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் வெளிநாடுகளில் இவ்வளவு சொத்துக்கள் இல்லை, ஏன், இந்திய பிரதமர் மோடிக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள்' என பிரதமர் மோடி வெளிநாடுகளில் சொத்து சேர்க்காதது குறித்து பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பில் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.

இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்த நிலையில், சமீபத்தில் பெய்த பருவமழையால் வெள்ளத்தால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைனையடுத்து இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீப் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் இம்ரான் கான் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன் ஆகும். இந்த சொத்துகளின் அளவை யாராலும் கணக்கிட முடியாது.

உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‛உலகில் எந்த அரசியல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை