25 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தினகரன்  தினகரன்
25 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

வாஷிங்டன்: 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க பெண் எழுத்தாளர், வழக்கை தொடர திட்டமிட்டிருக்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டின் மத்திய மான்ஹாட்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியின் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் அளித்திருக்கும் புகார் அமெரிக்க முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வாஷிங்கடனில் செய்தியாளர்களிடம் பேசிய கரோலின் வழக்கறிஞர் ராபர்ட், டிரம்ப் மீது வரும் 24ம் தேதி வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் ஜீன் கரோலின் குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். கரோல் சமீபத்தில் தான் எழுதியுள்ள புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக தன் மீது பாலியல் குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜீன் கரோல் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னை தாக்கியதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை