மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

தினகரன்  தினகரன்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

கென்ட்: ஹர்மன்பிரீத் கவுர் சதமடித்து உதவ, ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அபாரமாக விளையாடி 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் குவித்தார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் எடுக்க 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களை குவித்தது.அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை