இந்திய அணியில் யாருக்கு இடம்: பெண்கள் ஆசிய கோப்பைக்கு | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
இந்திய அணியில் யாருக்கு இடம்: பெண்கள் ஆசிய கோப்பைக்கு | செப்டம்பர் 21, 2022

புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் விளையாடி வரும் வீராங்கனைகள் ஆசிய கோப்பைக்கு தேர்வாகினர்.

வங்கதேசத்தில், வரும் அக். 1 முதல் 15 வரை பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8வது சீசன் நடக்கிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை அக். 1ல் சந்திக்கிறது. அதன்பின் மலேசியா (அக். 3), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அக். 4), பாகிஸ்தான் (அக். 7), வங்கதேசம் (அக். 8), தாய்லாந்து (அக். 10) அணிகளை எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் முடிவில் ‘டாப்–4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 13) தகுதி பெறும். பைனல், அக். 15ல் நடக்கிறது.

 

இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வெளியிட்டார். இங்கிலாந்து தொடரில் பங்கேற்று வரும் அதே வீராங்கனைகள் மீண்டும் தேர்வாகினர். மாற்று வீராங்கனைகளாக தானியா பாட்யா, சிம்ரன் பகதுார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்னே ராணா, ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாகூர், பூஜா, ராஜேஷ்வரி, ராதா யாதவ், கிரண் பிரபு நவ்கிரே.

 

மாற்று வீராங்கனைகள்: தானியா சப்னா, சிம்ரன் தில் பகதுார்.

மூலக்கதை