தெற்கு மண்டலம் கலக்கல் பவுலிங்: துலீப் டிராபி பைனலில் | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
தெற்கு மண்டலம் கலக்கல் பவுலிங்: துலீப் டிராபி பைனலில் | செப்டம்பர் 21, 2022

கோவை: துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டல பவுலர்கள் அசத்த, மேற்கு மண்டல அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் துலீப் டிராபி 59வது சீசன் நடக்கிறது. கோவை, ஆவாரம்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் பைனலில் மேற்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த மேற்கு மண்டல அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (1), பிரியங்க் பஞ்சால் (7) ஏமாற்றினர். கேப்டன் அஜின்கியா ரகானே (8) சோபிக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் (37), சர்பராஸ் கான் (34), சாய் கிஷோர் பந்தில் அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய சாய் கிஷோர் ‘சுழலில்’ ஷாம்ஸ் முலானி (0) சிக்கினார். ஆதித் ஷேத் (25), தனுஷ் (2) நிலைக்கவில்லை. மேற்கு மண்டல அணி 167 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

பின் இணைந்த ஹெட் படேல், ஜெயதேவ் உனத்கட் ஜோடி பொறுப்பாக விளையாடியது. ஹெட் படேல் அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்திருந்தது. ஹெட் படேல் (96), உனத்கட் (39) அவுட்டாகாமல் இருந்தனர். தெற்கு மண்டலம் சார்பில் சாய் கிஷோர் 3, பசில் தம்பி, சீபுரப்பள்ளி ஸ்டீபன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை