சூர்யகுமார் ‘நம்பர்–3’: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
சூர்யகுமார் ‘நம்பர்–3’: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | செப்டம்பர் 21, 2022

துபாய்: ஐ.சி.சி., ‘டி–20’ பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 780 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டி–20’ போட்டியில் 25 பந்தில் 46 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். இதனையடுத்து பாகிஸ்தானின் பாபர் ஆசம் (771 புள்ளி) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (825 புள்ளி), தென் ஆப்ரிக்காவின் மார்கரம் (792) நீடிக்கின்றனர்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்தில் 71 ரன் (5 சிக்சர், 7 பவுண்டரி) விளாசிய இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (446), 22 இடங்கள் முன்னேறி 65வது இடத்தை கைப்பற்றினார்.

 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 673 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏமாற்றிய இவர், 52 ரன் விட்டுக்கொடுத்தார். இப்போட்டியில் 3 விக்கெட் சாய்த்த அக்சர் படேல், 24 இடங்கள் முன்னேறி 33வது இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (785) முதலிடத்தில் நீடிக்கிறார்.

 

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.

மூலக்கதை