உலக டெஸ்ட் பைனல் எங்கே: ஐ.சி.சி., அறிவிப்பு | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
உலக டெஸ்ட் பைனல் எங்கே: ஐ.சி.சி., அறிவிப்பு | செப்டம்பர் 21, 2022

துபாய்: உலக டெஸ்ட் பைனல் ஓவல் (2023), லார்ட்சில் (2025) நடத்தப்படும் என, ஐ.சி.சி., அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. முதல் சீசனுக்கான (2019–2021) பைனலில் (இடம்: சவுத்தாம்ப்டன்) இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து கோப்பை வென்றது. இதன் இரண்டாவது சீசன் (2021–2023) தற்போது நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன. மூன்றாவது சீசன் 2023–2025ல் நடக்கவுள்ளது. இவ்விரு சீசனுக்கான பைனல் இங்கிலாந்தில் நடத்தப்படும் என, கடந்த ஜூலை மாதம் பர்மிங்காமில் நடந்த ஐ.சி.சி., ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் பைனல் நடக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது சீசனுக்கான பைனல், லண்டன், ஓவல் மைதானத்திலும், மூன்றாவது சீசனுக்கான பைனல், லண்டன், லார்ட்ஸ் மைதானத்திலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மூலக்கதை