கொரியா ஓபன் டென்னிஸ் சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்
கொரியா ஓபன் டென்னிஸ் சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா அதிர்ச்சி தோல்வி

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், சென்னை ஓபன் சாம்பியன் லிண்டா ஃபிரவிர்தோவா தோல்வியைத் தழுவினார். பெல்ஜியம் வீராங்கனை யானினா விக்மேயருடன் (32வயது, 396வது ரேங்க்) மோதிய லிண்டா (17 வயது, 74வது ரேங்க்) 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 29நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. யானினா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். சென்னை ஓபன் பைனலில் லிண்டாவிடம் தோற்ற போலந்து வீராங்கனை மாக்தா லினெட் (30 வயது, 51வது ரேங்க்)  6-2, 7-5 என நேர் செட்களில் நெதர்லாந்தின் அரியன் ஹர்டனோவை ( 26 வயது, 130வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா (29 வயது, 129வது ரேங்க்) தகுதிச்சுற்றில் ரியா பாட்டியா (இந்தியா), வாலென்டினி (கிரீஸ்) ஆகியோரை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேடிசன் இங்லிசை வீழ்த்திய அவர், 2வது சுற்றில் நேற்று சீனாவின் லின் சூவிடம் (28 வயது, 70வது ரேங்க்) 1-6, 3-6 என நேர் செட்களில் வீழ்ந்தார். இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, எகடரினா அலெக்சாண்ட்ரோவா, அன்னா பிளிங்கோவா (ரஷ்யா), டட்யானா மரியா (ஜெர்மனி) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை