இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாக்., | செப்டம்பர் 20, 2022

தினமலர்  தினமலர்
இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாக்., | செப்டம்பர் 20, 2022

கராச்சி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டி–20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கராச்சியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 68 ரன் எடுத்து உதவினார். கேப்டன் பாபர் ஆசம் 31, இப்திகார் 28 ரன் எடுத்தனர். 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் லுக் உட் 3, ரஷித் 2 விக்கெட் சாய்த்தனர்.

இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (53) கைகொடுத்தார். மலான் 20, டக்கெட் 21 ரன் எடுக்க இங்கிலாந்து வெற்றி எளிதானது. 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஹாரி (42), கேப்டன் மொயீன் அலி (7) அவுட்டாகாமல் இருந்தனர். 

மூலக்கதை