பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்

காபூல்: பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஒரு மாகாணத்தின் மீது பாகிஸ்தானின் விமானப்படை விமானம் தாக்குதல் நடத்தியதாக தேசிய எதிர்ப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், ஒரே ஒரு மாகாணத்தில் மட்டும் தாக்குதல் தொடர்கிறது.

பஞ்சஷிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் இங்கு போர் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடையாளம் தெரியாத சில ராணுவ விமானங்கள் மூலம் பஞ்சஷிரில் உள்ள தலிபான் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



முன்னதாக பஞ்சஷிர் ஆளுநர் அலுவலகத்திற்கு வெளியே தலிபான்கள் தங்களது கொடியை ஏற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், பஞ்சஷிர் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றவில்லை என்று தேசிய எதிர்ப்பு முன்னணியை வழிநடத்தி வரும் அஹ்மத் மசூத் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட ஆடியோபதிவில், ‘பஞ்சஷிரில் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் முடிவடையவில்லை. தலிபான்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.

தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது. பஞ்சஷிரில் பாகிஸ்தான் மற்றும் தலிபான்களால் குண்டு வீசப்பட்டது.

எங்கள் பகுதி மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அவர்களது இரண்டு ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

எங்களது கமாண்டோக்களை பாகிஸ்தான் கொன்றது’ என்று கூறினார்.

‘டோலோ’ செய்தி நிறுவன தகவலில், ‘தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் கடுமையாக போராட வேண்டும்.

தலிபான்களுக்கு எதிராக பஞ்சஷிர் மக்களும் களத்தில் உள்ளனர். தங்களது கடைசி ரத்தம் உடலில் இருந்து வெளியேறும் வரை போராடுவோம்’ என்று தெரிவித்துள்ளது.

அந்த செய்தி நிறுவனத்துக்கு அகமது மசூத் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானின் உதவியுடன் தலிபான்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ஐ. எஸ். ஐ தலைவர் ஃபைஸ் அகமது, காபூலில் முகாமிட்டுள்ளார்.

பஞ்சஷிர் மீது நடத்தப்படும் தாக்குதலில் பாகிஸ்தான் நேரடியாக ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் உதவியுடன் மக்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடன் இணைந்து பஞ்சஷிர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தி வருவது, சர்வதேச அளவில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை