பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்

காபூல்: பஞ்சஷிரை கைப்பற்றியதாக தலிபான்கள் கூறி வரும் நிலையில், அவர்கள் காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி வெற்றி கொண்டாட்டம் நடத்திய போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்கள் புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனமான அஸ்வாகா வெளியிட்ட செய்தியில், ‘காபூலில் நேற்றிரவு தலிபான்கள் வான்வழி துப்பாக்கிச்சூடு நடத்தி, தாங்கள் வெற்றிப் பெற்றதாக கொண்டாட்டங்களை நடத்தினர்.



குறிப்பாக பஞ்சஷிர் பள்ளத்தாக்கு தங்களது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கூறியும், தேசிய எதிர்ப்பு முன்னணியை தோற்கடித்ததாகக் கூறியும் மகிழ்ச்சி கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டங்களை பகிர்ந்த கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் சிலர் உயிரிழந்தனர்.

சிறுவர்கள் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் ராய்ட்டர் செய்தி நிறுவன தகவலின்படி, ‘ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றிவிட்டோம்.

எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பஞ்சஷிர் எங்களது கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது’ என்று தலிபான்கள் கோஷமிடும் வீடியோவை வெளியிட்டது.

ஆனால், இந்த செய்தி தவறானது என்று பஞ்சஷிரில் உள்ள எதிர்ப்புப் படைகளின் தலைவர் அஹ்மத் மசூத் கூறினார்.

தலிபான் மற்றும் பஞ்சஷிர் படையினருக்கு இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை